நெருப்பிலும் உருகாத வித்தியாசமான ஐஸ்கிரீம்.. மக்களிடையே பெரும் வரவேற்பு.. விலை எவ்வளவு தெரியுமா.?

0 1098

சீனாவைச் சேர்ந்த சைஸ்கிரீம் என்ற ஐஸ்கிரீம் நிறுவனம் நெருப்பிலும் உருகாத வித்தியாசமான ஐஸ்கிரீமை தயாரித்துள்ளது.

ஒரு பக்கம் மக்களின் கவனத்தை ஈர்த்தாலும், இன்னொரு பக்கம் மக்களிடையே இதில் அதிக ரசாயனங்கள் சேர்க்கப்பட்டிருக்கும் என்றும், இதன் விலை அதிகமாகத்தான் இருக்கும் எனவும் சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளன.

விலை மற்றும் அதில் சேர்க்கப்பட்டுள்ள பொருட்கள் பற்றி அந்நிறுவனம் விளக்கமளித்துள்ளது. இதன் விலை 66 சீன யுவான், அதாவது இந்திய ரூபாயின் மதிப்பின் படி 780 ரூபாய் என்று தெரிவித்துள்ளது.

மேலும், இதில் சேர்க்கப்பட்டிருக்கும் மூலப்பொருட்கள் அனைத்தும் சீனாவின் தேசிய உணவு பாதுகாப்பு விதிமுறைகளுக்கு உட்பட்டவையே என்றும் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments