சர்வதேச வர்த்தகத்தை ரூபாய் மூலம் நடத்த ரிசர்வ் வங்கி நடவடிக்கை.!
சர்வதேச வர்த்தகத்தை ரூபாய் மதிப்பில் செய்ய ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுத்துள்ளது. டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு சரிந்து வரும் நிலையில் ரூபாயை சர்வதேச அளவில் முக்கியமாக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சர்வதேச வர்த்தக பரிவர்த்தனைகள் ரூபாயில் நடைபெற வேண்டும் என்று அறிவித்துள்ளது. இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருகிறது .அனைத்து ஏற்றுமதி மற்றும் இறக்குமதிகள் ரூபாய் மதிப்பில் இருக்க வேண்டும்.
இரு வர்த்தக நாடுகளின் பணத்திற்கு இடையிலான மாற்று விகிதங்களை சந்தை நிலவரத்தின் மூலம் தீர்மானிக்கலாம் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது
Comments