வீராவேசமாக ஓடிச்சென்று வீதி வீதியாக அடிவாங்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்..!

0 3733
வீராவேசமாக ஓடிச்சென்று வீதி வீதியாக அடிவாங்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்..!

திருப்பூரில் மாணவர்கள் இருதரப்பாகப்  பிரிந்து வீதிகளில் விரட்டி விரட்டி ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர் ரயில்நிலையம் அருகேயுள்ள நஞ்சப்பா அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கும், ((SPL gfx in )) குமார் நகர் பிஷப் அரசு உதவி பெறும் பள்ளியைச் சேர்ந்த மாணவர்களுக்கும் இடையே யார் கெத்து என்பது தொடர்பாக கடந்த ஒரு வாரமாக பிரச்சனை நீறுபூத்த நெருப்பாக இருந்துள்ளது.

இந்நிலையில் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கும், அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் ரயில்நிலையம் அருகே மோதல் ஏற்பட்டு உள்ளது.

கையில் சிக்கிய எதிர்தரப்பு மாணவர்களை அரசுப் பள்ளி மாணவர்கள் கற்களை வீசி தாக்கி விரட்டி உள்ளனர்.

அதற்குள்ளாக ஓடிச்சென்ற மாணவர்கள் தங்கள் ஆதரவாளர்களை அழைத்து வர, அவர்கள் கையில் கட்டைகளுடன் அரசுப் பள்ளி மாணவர்களை விரட்டி விரட்டி வெளுத்தனர்.

ஓடியபோது வழுக்கி விழுந்து சிக்கிக் கொண்ட மாணவனை அடிப்பதை பார்த்து ஒருவர் மாணவர்களைத் தடுக்க முயன்றார். அவரையும் தாக்கிவிட்டு ஓடியதாக கூறப்படுகின்றது.

தகவலறிந்து விரைந்து சென்ற திருப்பூர் வடக்கு போலீசார், சில மாணவர்களைப் பிடித்து காவல் நிலையம் அழைத்துச் சென்று பெற்றோரை வரவழைத்து எச்சரித்து அனுப்பினர்.

ஒரு வாரமாக பிரச்சனை இருந்துள்ளதால், முன்கூட்டியே இரு பள்ளிகளுக்கும் சென்று மாணவர்களிடையே ஏற்பட்ட பிரச்சனையை போலீசார் தீர்த்து வைத்திருந்தால் வீதியில் நின்று கல்லெறியும் நிலை ஏற்பட்டிருக்காது என்று அப்பகுதி வியாபாரிகள் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments