கந்து வட்டி காரணமாக தற்கொலைக்கு முயற்சித்த இளைஞர் வெளியிட்ட வீடியோ அடிப்படையில் போலீசார் விசாரணை

0 1837
கந்து வட்டி காரணமாக தற்கொலைக்கு முயற்சித்த இளைஞர் வெளியிட்ட வீடியோ அடிப்படையில் போலீசார் விசாரணை

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே கந்து வட்டி கொடுமை எனக்கூறி இளைஞர் ஒருவர் தற்கொலைக்கு முயற்சித்த நிலையில், அவர் பூச்சி மருந்து குடிக்கும் முன் கண்ணீர் மல்க பேசி வெளியிட்ட வீடியோவின் உதவியுடன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

செங்கோடனூர் பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பவர் கூலி வேலை செய்து வருகிறார். தனது சொந்த செலவிற்காக சேட்டு மற்றும் துரை ஆகியோரிடம் அவர் 40 ஆயிரம் ரூபாய் கடனாக பெற்றதாக கூறப்படுகிறது.

கடனுக்கான வட்டியாக 4 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் சுரேஷ் திரும்ப செலுத்தியதாகவும், மேலும் வட்டி கேட்டு 5 லட்ச ரூபாய்க்கு மேல் செலுத்தக்கூறி மிரட்டியதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில், இது குறித்து சமூக வலைதளத்தில் வீடியோ பதிவு செய்து அவர் தற்கொலைக்கு முயற்சித்ததை அடுத்து, உறவினர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்ததனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments