குஜராத் முந்த்ரா துறைமுகத்தில் சுமார் 350 கோடி ரூபாய் மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல்.!
குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் உள்ள முந்த்ரா துறைமுகத்தில் வெளிநாட்டில் இருந்து அண்மையில் வந்த கன்டெய்னரில் இருந்து சுமார் 350 கோடி ரூபாய் மதிப்புள்ள ஹெராயின் போதைப்பொருளை தீவிரவாத தடுப்பு படையினர் கைப்பற்றினார்கள்.
கன்டெய்னரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 70 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இதே முந்த்ரா துறைமுகத்தில் சுமார் 21 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள 3 ஆயிரம் கிலோ ஹெராயின் கைப்பற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Comments