இந்தியா,இஸ்ரேல், அமெரிக்கா, யுஏஇ பங்கேற்கும் மாநாடு.. காணொலி வாயிலாக பிரதமர் மோடி, ஜோ பைடன் உள்ளிட்டோர் பங்கேற்பு..!

0 1899
இந்தியா,இஸ்ரேல், அமெரிக்கா பங்கேற்கும் மாநாடு.. காணொலி வாயிலாக பிரதமர் மோடி, ஜோ பைடன் உள்ளிட்டோர் பங்கேற்பு..!

இந்தியா, அமெரிக்கா, இஸ்ரேல், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நான்கு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் I2U2: மாநாடு காணொலி வாயிலாக 14 ஆம் தேதி நடைபெற உள்ளது.

ஐ -2 என்பது இந்தியா, இஸ்ரேலை குறிக்கிறது. யு 2 என்பது அமெரிக்காவையும் யுஏஇயையும் குறிக்கிறது.சர்வதேச அளவில் உணவு மற்றும் மின் ஆற்றல் தேவை குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ளது.

உக்ரைன் போரால் ஏற்பட்டிருக்கும் விளைவுகளையும் இந்த காணொலி சந்திப்பு ஆலோசிக்க உள்ளது. இந்த மாநாட்டில் பிரதமர் மோடியும் அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் பங்கேற்கின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments