இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு: அவசர ஆம்புலன்ஸ் சேவை நிறுத்தம்.!
கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில் நிலவி வரும் எரிபொருள் தட்டுப்பாட்டினால் அங்கு பெரும்பாலான பகுதிகளில் மருத்துவ அவசர ஆம்புலன்ஸ் சேவை நிறுத்தப்பட்டுள்ளது.
கடும் பொருளாதார நெருக்கடியால் உணவுப்பொருட்கள், மருந்துகள், எரிவாயு ஆகியவற்றுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பல மணி நேர மின்வெட்டும் நிலவுகிறது. நாட்டின் பல்வேறு அரசுக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், ஆம்புலன்ஸ் அவசர உதவி எண்ணான 1990-யை அழைப்பைத் தவிர்க்குமாறு அங்குள்ள ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளன. அனுராதபுரம், ரத்தினபுரி, வவுனியா, முல்லைத்தீவு உள்ளிட்ட பகுதிகளில் ஆம்புலன்ஸ் சேவை இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments