ஸ்டெடியா நிற்கிற மாதிரி நித்திக்கு கோவில் கட்டிய பக்தர்கள்… எங்கு தெரியுமா? சிங்கமே பயத்தால் அலறுது..!

0 2778
ஸ்டெடியா நிற்கிற மாதிரி நித்திக்கு கோவில் கட்டிய பக்தர்கள்… எங்கு தெரியுமா? சிங்கமே பயத்தால் அலறுது..!

தலைமறைவாக உள்ள நித்தியானந்தாவுக்கு என்ன தான் ஆச்சு? என்று தெரியாமல் மர்மம் நீடித்து வரும் நிலையில், புதுச்சேரி பக்தர்கள் அவருக்கு சிலையுடன் கூடிய கோவில் ஒன்றை கட்டி உள்ளனர். பாலியல் வழக்கில் போலீசாரால் தேடப்படும் நித்திக்கு, தமிழ் கடவுள் முருகனுக்கு இணையாக, சிலை வைத்ததால் சர்ச்சை எழுந்துள்ளது. 

பாலியல் வழக்கில் சிக்கி போலீசாரால் தேடப்பட்டு வரும் நித்தியானந்தா, உலக வரை படத்தில் இல்லாத கைலாசா நாட்டில் இருப்பதாக கூறி தலைமறைவாக இருந்து வீடியோவில் பேசி வந்தார்.

திடீர்ன்னு மாயமான அவரது பெயரில் சமாதி நிலைக்கு சென்று விட்டதாக கூறி முக நூல் பதிவுகள் வெளியாகி வருகின்றது.

இந்த நிலையில் தமிழர்களின் கடவுளாக வணங்கும் முருகப்பெருமானுக்கு சிலைவைப்பதாக போலீசாரிடம் அனுமதி பெற்றுவிட்டு, போலீசாரால் தேடப்படும் நித்தியானந்தாவுக்கு, முருகப்பெருமானுக்கு இணையாக சிலையை வைத்த பக்தரால் தற்போது போலீசாருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

புதுச்சேரி மாநிலம் குருமாம்பேட் அருகே பெரம்பையில் உள்ள நித்தியானந்தாவின் சீடரான பாலசுப்பிரமணியம் என்பவர் மலேசிய முருகன் கோவில் போல் இங்கு ஒரு கோவிலைக் கட்டிஇருப்பதாக கூறி போலீசாரிடம் அனுமதி பெற்றுள்ளார்.

இந்த கோவிலில் 27 அடியில் முருகன் சிலை பிரமாண்டமாக கட்டி முடிக்கப்பட்டு ஸ்ரீ பத்துமலை முருகன் ஆலயம் என பெயரிடப்பட்டு இன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது.

கோவிலின் நுழைவு வாயிலில் 18 அடி உயரத்தில் நித்தியானந்தா உருவம் கொண்ட பிரம்மாண்ட சிலையை கண்ட பொதுமக்களும், காவல்துறையினரும் அதிர்ச்சி அடைந்தனர்.

நித்தியின் சிலைக்கும் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. ஏற்கனவே நித்யானந்தா சிவன் போல் வேடம் அணிந்து கையில் சூலத்துடன் நிற்பது போல் இந்த சிலையை அமைத்து அதன் அருகில் பயத்தில் அலறும் இரு சிங்கங்களின் சிலைகளையும் அமைத்துள்ளனர்.

போலீசாரால் தேடப்படும் நித்திக்கு , இந்து கடவுளருக்கு இணையாக கோயில் கட்டி அங்கு 18 அடியில் சிலையை நிறுவிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும் சர்ச்சையையும் ஏற்படுத்தி உள்ளதால், கோவிலில் நித்திக்கு சிலை நிறுவியவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கிடையே இன்னும் ஒரு சில தினங்களில் நித்தி யூடியூப்பில் தோன்றி அவரை இன்னும் நம்பும் பக்தர்களுக்கு உரையாற்றுவார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments