2023-ம் ஆண்டில் இந்தியர்கள் விண்வெளிக்கு அனுப்பப்படுவார்கள் -அமைச்சர் ஜிதேந்திர சிங்

0 1281

ககன்யான் திட்டத்தின் ஆயத்தப்பணிகள் நிறைவடைந்துள்ளதாக தெரிவித்த அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஜிதேந்திர சிங், அடுத்த ஆண்டில் இந்தியர்கள் விண்வெளிக்கு அனுப்பபடுவார்கள் எனக்கூறினார்.

இந்தாண்டு இறுதிக்குள் ககன்யான் திட்டத்தின் சோதனை ஓட்டம்  இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ளதாக தெரிவித்த அவர், முதற்கட்ட சோதனையில் விண்கலம் மட்டும் செலுத்தப்படும் என்றும், இரண்டாம் கட்ட சோதனையில் வியோமித்ரா ரோபோ விண்வெளிக்கு அனுப்பப்படும் என்றும் கூறினார்.

சோதனைக்கு பின் 2023-ம் ஆண்டில் ஒன்று அல்லது இரண்டு இந்தியர்கள் விண்வெளிக்கு செல்வார்கள் என அமைச்சர் தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments