அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் நடத்த நீதிமன்றம் அனுமதி..!
கட்சி உறுப்பினர்களின் நம்பிக்கையை பெற முடியாதவர்கள் நீதிமன்றங்களை ஒரு கருவியாக தங்களுக்கு சாதகமாக பயன்படுத்துவதாகக் கூறி, பொதுக்குழுவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
சட்டப்படி பொதுக்குழு கூட்டத்தை கூட்டுவதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கிவிட்ட நிலையில், அதற்கு முரணாக உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க முடியாது என்ற நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, இரண்டாயிரத்து 190 பொதுக்குழு உறுப்பினர்கள் ஜூன் 23 ஆம் தேதியே பொதுக்குழுவைக் கூட்ட கேட்டுக் கொண்டதால், 15 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டதாகவே கருத முடியும் என்றார்.
ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் உறுப்பினர்களை சமாதானம் செய்து அவர்களின் நம்பிக்கையை பெறும் வகையில் பொதுக்குழுவை அனுகுவதை விடுத்து ஒவ்வொரு முறையும் நீதிமன்றத்தை நாடுவதாகவும், நீதிமன்றம் மூலம் சாதிக்க முயல்வதாகவும் நீதிபதி கூறினார். பொதுக்குழுவில் நிவாரணம் கிடைக்காவிட்டால் உரிமையியல் நீதிமன்றத்தை அணுகலாம் என்றும் உத்தரவிட்டார்.
Comments