சின்னத்திரை நடிகர் சங்க தேர்தல் : நடிகர் சிவன் ஸ்ரீநிவாஸின் வசந்தம் அணி வெற்றி..!

0 4328
சின்னத்திரை நடிகர் சங்க தேர்தல் : நடிகர் சிவன் ஸ்ரீநிவாஸின் வசந்தம் அணி வெற்றி..!

சென்னை விருகம்பாக்கத்தில் நடைபெற்ற சின்னத்திரை நடிகர் சங்க தேர்தலில் தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் ஆகிய 3 பதவிகளிலும் நடிகர் சிவன் ஸ்ரீநிவாஸ் தலைமையிலான வசந்தம் அணி வெற்றி பெற்றது.

தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட சிவன் ஸ்ரீநிவாசன் 351 வாக்குகளும், பொதுச்செயலாளர் பதவிக்குப் போட்டியிட்ட நடிகர் போஸ் வெங்கட் 349 வாக்குகளும், பொருளாளர் பதவிக்குப் போட்டியிட்ட சுப்ரமணியம் ஜெயந்த் 290 வாக்குகளும் பெற்று வெற்றி பெற்றுள்ளனர்.

மற்ற பதவிகளான துணைத்தலைவர், இணைச் செயலாளர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்களின் வாக்குகள் இன்று எண்ணப்படவுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments