காட்டுத்தீயால் யோசெமிட்டி தேசியப் பூங்காவின் ஒரு பகுதி மூடல்.. 3000 ஆண்டுகள் பழமையான சீக்வோயா மரங்கள் இருப்பதால் நடவடிக்கை..!

0 1340
காட்டுத்தீயால் யோசெமிட்டி தேசியப் பூங்காவின் ஒரு பகுதி மூடல்.. 3000 ஆண்டுகள் பழமையான சீக்வோயா மரங்கள் இருப்பதால் நடவடிக்கை..!

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள காடுகளில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயால் யோசெமிட்டி தேசியப் பூங்காவின் ஒரு பகுதி மூடப்பட்டது.

தேசியப்பூங்காவில் 3 ஆயிரம் ஆண்டுகள் வரை பழமையான சீக்வோயா மரங்கள் இருப்பதால் அவற்றை பாதுகாப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கொழுந்து விட்டு எரியும் தீயால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. 481 ஹெக்டேருக்கு இந்த தீ பரவியுள்ளதால் இதுவரை 1500-க்கும் மேற்பட்ட மக்கள் அப்பகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments