உக்ரைனுக்கு மேலும் 400 மில்லியன் டாலர் மதிப்பில் ராணுவ உதவி - அமெரிக்கா
உக்ரைனுக்கு கூடுதலாக 400 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான ராணுவ உதவிகளை வழங்குவதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார்.
அதிநவீன ஏவுகணை அமைப்புகள், பீரங்கி குண்டுகள், ராணுவ கவச வாகனங்கள், ஏவுகணை எதிர்ப்பு அமைப்புகள் உள்ளிட்ட திறன்மிக்க ஆயுதங்கள் இந்த தொகுப்பில் அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் ராணுவ தாக்குதல் 150-ஆவது நாளை நெருங்கியுள்ள நிலையில், லுஹான்ஸ்க் மாகாணம் முழுவதுமாக கைப்பற்றிய ரஷ்ய படைகள், கிழக்கு உக்ரைனின் டொனெட்ஸ்க் மாகாணத்தை கைப்பற்ற தாக்குதல்களை தீவிரப்படுத்தி வருகின்றன.
போரில் உக்ரைனுக்கு ஆதரவாக இருந்து வரும் அமெரிக்கா, ராணுவம், நிதி மற்றும் மனிதாபிமான உதவிகளை தொடர்ந்து வழங்கி வருகிறது.
Comments