கர்நாடகாவில் பல பகுதிகளில் 2 முறை மிதமான நில அதிர்வுகள்

0 1477

கர்நாடக மாநிலம் விஜயபுரா மாவட்டத்தில் பல பகுதிகளில் இன்று காலையில் 2 முறை மிதமான நில அதிர்வுகள் உணரப்பட்டுள்ளன.

காலை 6.22 மணியளவில் உணரப்பட்ட நிலஅதிர்வு ரிக்டர் அளவுகோளில் 4 புள்ளி 9 ஆகவும், 6.24 மணியளவில் உணரப்பட்ட நிலஅதிர்வு ரிக்டர் அளவுகோலில் 4 புள்ளி 6 ஆகவும் பதிவாகி உள்ளது.

கர்நாடகாவில் கடந்த 15 நாட்களில் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இருப்பினும் அவை அனைத்தும் ரிக்டர் அளவுகோலில் 5-க்குக் கீழ் பதிவாகி உள்ளதோடு எந்த பொருட்சேதமோ உயிரிச்சேதமோ ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments