சாலையில் சீறிப் பாயும் கார்களுக்கு மத்தியில் திடீரென தரை இறங்கிய விமானம்

0 1774

அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாகாணத்தில் Swain County நெடுஞ்சாலையில் சிறிய ரக விமானம் ஒன்று கடுமையான வாகன போக்குவரத்துக்கு மத்தியில் பத்திரமாக தரை இறக்கப்பட்டது.

மலைப்பாங்கான அந்த நெடுஞ்சாலையில் விமானத்தை பத்திரமாக தரை இறக்கிய விமானிக்கு அந்நகர ஷெரீப் பாராட்டு தெரிவித்தார். விமானத்தில் இருந்த விமானி உயிரிழந்ததை அடுத்து அதில் இருந்த பயணியே விமானியாக செயல்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சம்பவத்தில் சாலையில் சென்றவர்களுக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை. சாலையில் சீறிப் பாய்ந்த கார்களுக்கு மத்தியில் விமானத்தை சாதுர்யமாக விமானியாக செயல்பட்டவர் தரை இறக்கும் வீடியோ வெளியாகி உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments