8 ஆண்டுகளில் வளர்ச்சியையும், உள்ளடக்கத்தையும் நாடு காண்கிறது - பிரதமர் மோடி
நாடு முழுவதும் கடந்த எட்டு ஆண்டுகளில் 209 புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். தமது ஆட்சியில் பல்வேறு உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டிருப்பதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்
மத்திய நிதி அமைச்சகம் மற்றும் பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சகம் இணைந்து நடத்திய முன்னாள் மத்திய அமைச்சர் மறைந்த அருண் ஜெட்லி நினைவு சொற்பொழிவு மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் மோடி, கடந்த 8 ஆண்டுகளில் நாடு வளர்ச்சியையும், உள்ளடக்கத்தையும் கண்டு வருவதாக தெரிவித்தார்.
நாட்டில் அனைவருக்குமான வளர்ச்சி இல்லாமல் உண்மையான வளர்ச்சி இல்லை என்றும் உள்ளடக்கிய வளர்ச்சியே அனைவருக்குமான வளர்ச்சி என பிரதமர் மோடி கூறினார்.
கடந்த எட்டு ஆண்டுகளில் நாட்டில் 45 கோடி புதிய வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும், 9 கோடி இலவச சமையல் எரிவாயு இணைப்புகள் வழங்கப்பட்டதாகவும் பிரதமர் கூறினார். 10 கோடி கழிவறைகள் கட்டப்பட்டுள்ளதாகவும், முந்தைய ஆட்சியில் இல்லாத அளவில் கடந்த ஏழு முதல் 8 ஆண்டுகளில் 209 புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
உள்ளடக்கிய வளர்ச்சி என்ற கொள்கையின் படி கடந்த 8 ஆண்டுகளில் பல்வேறு சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டதாக பிரதமர் தெரிவித்தார். சீர்திருத்தங்கள் யாருடைய வற்புறுத்தலின் பேரில் செய்யப்படவில்லை என்றும் உள்ளார்ந்து அடுத்த 25 ஆண்டுகளுக்கான நாட்டின் வளர்ச்சிப்பாதை திட்டமிட்டு செய்யப்பட்டதாக பிரதமர் மோடி கூறினார்.
Comments