ஒரு கோடி ரூபாய்க்கும் மேல் பணத்தை பெற்று மோசடி... வீட்டுமனை பத்திரப் பதிவு செய்து தராமல் ஏமாற்றிய 3பேர் கைது

0 1688

விழுப்புரம் மாவட்டத்தில் ஒரு கோடி ரூபாய்க்கும் மேல் பணத்தைப் பெற்றுக் கொண்டு, வீட்டுமனையை பத்திரப்பதிவு செய்து தராமல் ஏமாற்றி வந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

காக்குப்பம் கணபதி நகரைச் சேர்ந்த சித்ரா என்பவர் விழுப்புரம் பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசில் புகார் மனு அளித்தார். அதில், திருக்கோவிலூரைச் சேர்ந்த பரணிதரன், பாலாஜி, பார்த்தசாரதி, இளங்கோவன் ஆகிய 4 பேர் விருத்தாசலம் பழமலை நகரில் பல்வேறு பெயர்களில் வீட்டுமனைகளை விற்பனை செய்து ஒரு கோடி ரூபாய்க்கும் மேல் ஏமாற்றி விட்டதாக குற்றஞ்சாட்டியிருந்தார்.

இதன் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு 3 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள பார்த்தசாரதியை போலீசார் தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments