சமையல் எண்ணெய் விலையை லிட்டருக்கு ரூ.15 குறையுங்கள்... எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அதிரடி
சமையல் எண்ணெய் விலையை லிட்டருக்கு 15ரூபாய் குறைக்குமாறு எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது.
இதுதொடர்பாக மத்திய பொதுவினியோகத்துறை விடுத்துள்ள அறிக்கையில், நாட்டில் நிலவும் சமையல் எண்ணெய் விலை நிலவரம், எண்ணெய் இருப்பு ஆகியவற்றை அரசு தொடர்ந்து கண்காணித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமையல் எண்ணெய் மீதான வரிகளை குறைத்துள்ள நிலையில், அதன் பலன் தவறாமல் பொதுமக்களை உடனே சென்றடைய வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
Comments