கோத்தபயா பதவி விலக போராட்டம்... பொது மக்கள் - போலீசாரிடையே தள்ளுமுள்ளு... மறு உத்தரவு வரும் வரை ஊரடங்கு

0 1338

இலங்கையில் தலைநகர் கொழும்புவில் மறு உத்தரவு வரும் வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ரயில் உள்ளிட்ட சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 

கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில் அதிபர் கோத்தபயாவுக்கு எதிரான போராட்டங்கள் தொடர்ந்து வருகின்றன. அதிபர் கோத்தபயா பதவி விலகக் கோரி கொழும்புவில் மாணவ அமைப்பினர், பொது மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் தள்ளு முள்ளூ ஏற்பட்ட நிலையில், பொது மக்களை கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தண்ணீர் பீய்ச்சி அடித்தும் போலீசார் விரட்டினர்.

தலைநகர் கொழும்பு உள்ளிட்ட பகுதிகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கை மீறி வன்முறை மற்றும் கலவரத்தில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க போலீஸ் மற்றும் ராணுவத்திற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது. அத்தியாவசிய பணிகள் தவிர்த்து வீடுகளை விட்டு மக்கள் வெளியேற வேண்டாம் என போலீசார் அறிவுறுத்தி உள்ளனர். ஊரடங்கை தொடர்ந்து தலைநகர் கொழும்பு உள்ளிட்ட பகுதிகளில் ரயில் உள்ளிட்ட சேவைகள் ரத்து செய்யப்பட்டன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments