மழை நீர் சூழ்ந்த பகுதியில் சிக்கிய பள்ளிப்பேருந்து.. சிறார்களை உடனடியாக மீட்க களத்தில் இறங்கிய பொதுமக்கள்.!
தெலங்கானா மாநிலத்தின் மஹ்பூப் நகரில் 30 மாணவர்களுடன் சென்ற பள்ளிப்பேருந்து மழை வெள்ளம் சூழ்ந்த பகுதியில் பாதி மூழ்கிய நிலையில், அதில் இருந்த சிறார்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
மஹ்பூப் நகர் பகுதியில் நேற்று முதல் தொடர் கனமழை பெய்த நிலையில், அங்குள்ள தாழ்வான பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்தது. இந்நிலையில், இன்று காலை மாணவர்களுடன் சென்ற பள்ளிப் பேருந்து ஒன்று மச்சனப்பள்ளி என்ற பகுதியின் அருகே ரயில் பாலத்தின் கீழே சென்றபோது மழைநீர் சூழ்ந்த இடத்தில் சிக்கியது.
இதனைக் கண்ட அப்பகுதி மக்கள், உடனடியாக விரைந்து சென்று பேருந்தில் இருந்த சிறார்களை பத்திரமாக மீட்டனர்.
Comments