“தி காட்ஃபதர்” திரைப்படத்தில் கேங்ஸ்டராக நடித்த பிரபல நடிகர் ஜேம்ஸ் கான் காலமானார்..!

0 1615

கல்ட் கிளாசிக் “தி காட்ஃபதர்” திரைப்படத்தில் கேங்ஸ்டர் சோனி கோர்லியோனாக நடித்த பிரபல அமெரிக்க நடிகர் ஜேம்ஸ் கான் காலமானார்.

அவருக்கு வயது 82. மாஃபியாக்களின் வாழ்க்கையை மையப்படுத்தி மேரியோ புஸோ எழுதிய “தி காட்ஃபாதர்”நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட “தி காட்ஃபாதர்” 1972-ல் வெளியானது.

கேங்ஸ்டர் மூவி என்ற பிராண்டுக்குப் பெருமதிப்பை ஏற்படுத்திக் கொடுத்த இந்த படம் சினிமா ஆர்வலர்களால் கொண்டாடித் தீர்க்கப்பட்டது.

சோனி கோர்லியோன் கதாபாத்திரத்திற்காக சிறந்த துணை நடிகருக்கான ஆஸ்கார் விருது மற்றும் கோல்டன் குளோப் ஆகியவற்றுக்கு கான் பரிந்துரைக்கப்பட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments