அக்னிபத் திட்டத்தின் அம்சங்கள் குறித்து விளக்கம் அளிக்கவுள்ளார் அமைச்சர் ராஜ்நாத்சிங்..!
அக்னிபத் திட்டத்தின் அம்சங்கள் குறித்து மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், டெல்லியில் நடைபெற உள்ள நாடாளுமன்ற ஆலோசனைக் குழுவிடம் விளக்கம் அளிக்கவுள்ளார்.
11ந் தேதி நடைபெறும் கூட்டத்தில் பாதுகாப்புத்துறை செயலாளர், முப்படைத் தளபதிகள் மற்றும் பாதுகாப்புத்துறை உயரதிகாரிகள் கலந்து கொள்ளவுள்ளனர்.
4 ஆண்டு கால ஒப்பந்த முறையில் ராணுவத்தின் முப்படைகளிலும் பணியாற்ற அக்னிபாத் என்ற திட்டத்தில் அறிவித்தது.
25 சதவீதம் பேர் மட்டுமே நிரந்தரமாக்கப்படுவார்கள் என்பதால் எதிர்காலம் குறித்த பிரச்சினை எழுந்து போராட்டங்கள் எழுந்தன. இந்நிலையில், அக்னிபத் திட்டத்தில் வீரர்கள் சேர்ப்பு உள்ளிட்ட அம்சங்கள் குறித்து ராஜ்நாத்சிங் விளக்கம் அளிக்கவுள்ளார்.
Comments