கருப்பினத்தவர் ஜார்ஜ் ஃப்ளாயிட்டைகொடூரமாகக் கொன்ற காவல் அதிகாரிக்கு 21 ஆண்டு சிறைத்தண்டனை
கருப்பினத்தவரான ஜார்ஜ் ஃப்ளாயிட்டை கொடூரமாகக் கொன்ற அமெரிக்காவின் முன்னாள் காவல்துறை அதிகாரி டெரக் சாவினுக்கு 21 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
அதிகாரத்தை தேவைக்கு அதிகமாகப் பயன்படுத்தியதுடன் ஜார்ஜின் உயிரைக் காப்பாற்ற மருத்துவ உதவி வழங்கத் தவறியதாகவும் காவல் அதிகாரிக்கு நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. காவல்துறையின் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியதாகவும் தீர்ப்பளித்த நீதிமன்றம் 252 மாதங்கள் சிறையில் கழிக்க உத்தரவிட்டது.
ஜார்ஜ் ஃப்ளாய்டின் கழுத்தில் கால் முட்டியால் டெரெக் அழுத்தியதில் அவர் உயிரிழந்தார். ஜார்ஜ் ஃப்ளாய்டின் மரணம் உலகம் முழுக்க பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இனவெறி மற்றும் காவல்துறையின் அடக்குமுறைக்கு எதிராக பல போராட்டங்கள் வெடித்தன.
Comments