10-ம் வகுப்பு மாணவி கூட்டு பாலியல் பலாத்காரம்.. சக மாணவர்கள் 4 பேர் போக்சோ சட்டத்தில் கைது.!
கடலூர் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு மாணவியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த விவகாரத்தில் சக மாணவர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
அரசு பள்ளியில் படித்து வரும் அந்த மாணவி சக மாணவரின் பிறந்த நாள் விழாவிற்கு சென்றுள்ளார். அந்த மாணவருடன் அவர் இருக்கும் புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றி விடுவதாக மிரட்டிய சக மாணவர்கள் 3 பேர் அந்த மாணவியை தனியாக வரவழைத்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
இது பிற மாணவர்களுக்கும் தெரியவந்ததால் பயந்து போன அந்த சிறுமி தாயாரிடம் தெரிவித்துள்ளார். பெற்றோர் அளித்த புகாரின் பேரில், விசாரணை நடத்திய போலீசார் மாணவியுடன் புகைப்படத்தில் இருந்த மாணவன் உள்பட 4 மாணவர்களையும் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
அந்த மாணவியும், மாணவர்களும் வேறு வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
Comments