குழந்தைகளுக்குத் வாங்கிய பானி பூரியை சாப்பிட வேண்டாம் என கூறிய மனைவியை அடித்து கொலை செய்த கணவன்.!
கர்நாடக மாநிலத்தில், குழந்தைகளுக்குத் வாங்கி கொடுத்த பானி பூரியை சாப்பிட வேண்டாம் என கூறிய மனைவியை அடித்து கொலை செய்து விட்டு பெண் தோழி வீட்டில் பதுங்கியிருந்த கணவரை போலீசார் கைது செய்தனர்.
மாண்டியா மாவட்டத்தை சேர்ந்த ரவி கவுடா என்பவருக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருந்ததால், அவருக்கும் அவரது மனைவி யோகிதாவுக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது.
ரவி கவுடா குழந்தைகளுக்கு வாங்கி கொடுத்த பானி பூரியை யோகிதா சாப்பிட வேண்டாம் என கூறியதால் ஆத்திரமடைந்த ரவி மனைவியை தலை முடியை பிடித்து இழுத்து சென்று, கம்பியால் கழுத்தில் அடித்து குழந்தைகள் கண் எதிரே கொலை செய்ததாக கூறப்படுகிறது.
அங்கிருந்து தப்பி ஓடிய ரவியை அவரது பெண் தோழி வீட்டில் வைத்து போலீசார் கைது செய்தனர்.
Comments