சாலையில் திடீரென தீப்பற்றி எரிந்த தனியார் பேருந்து
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் சாலையில் சென்றுக்கொண்டிருந்த தனியார் பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்தது.
குன்றத்தூரில் இருந்து வேலூரை நோக்கி தனியார் நிறுவனத்திற்கு பணியாளர்களை ஏற்றி செல்லும் குளிர்சாதன பேருந்து சென்றுக்கொண்டிருந்தது.
அப்போது, ஸ்ரீபெரும்புதூரில் அருகே பேருந்தின் முன்பக்கம் புகை வந்துள்ளது. சுதாரித்த ஓட்டுநர் , உடனடியாக பேருந்தில் இருந்து இறங்கிய நிலையில், பேருந்து தீப்பற்றி எரிந்தது. மேலும் அதிகளவில் கரும்புகை வெளியேறியது.
தகவலறிந்து வந்த தீயணைப்புத்துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும் பேருந்தின் முன்பக்கம் முழுவதும் எரிந்துவிட்டது
Comments