மாட்டுக்கறி உணவு படத்துக்கு பதில் அளித்து மாநகர காவல் துறை டிவிட்... சென்னை காவல் ஆணையர் காட்டம்

0 2629

மாட்டுக்கறி தொடர்பான டிவிட்டர் பதிவுக்கு, சென்னை மாநகர காவல் துறை பதில் அளித்தது தவறுதலானது என சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் விளக்கம் அளித்துள்ளார்.

அபுபக்கர் என்பவர் தனது டிவிட்டர் பக்கத்தில் மாட்டுக்கறி உணவின் படத்தை பதிவிட்ட நிலையில், "இது தேவையற்ற பதிவு" என்றும், "தேவையற்ற பதிவுகளை தவிர்க்கவும்" என சென்னை மாநகர காவல்துறை டிவிட்டர் கணக்கில் இருந்து பதில் அளிக்கப்பட்டது.

சமூக ஊடங்களில் இது சர்ச்சைக்குள்ளான நிலையில், அந்த பதிவை காவல்துறை நீக்கியுள்ளது. சென்னை காவல் துறையின் அதிகாரப்பூர்வ பக்கத்தில், அபுபக்கரின் டிவிட், ரீ டிவிட் செய்யப்பட்டதே தங்களது பதிவுக்கு காரணம் என காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments