‘குண்டு ஒன்னு வச்சிருக்கேன்’ கலவர கும்பலை துப்பாக்கியால் விரட்டிய புத்திசாலி போலீஸ்..!
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே கபடி போட்டியில் ஏற்பட்ட தகராறில் இரு கிராம மக்கள் அரிவாள், கம்புகளுடன் திரண்ட நிலையில் காவல் உதவி ஆய்வாளர் ஒருவர் தன்னிடம் உள்ள கைத்துப்பாக்கியை உயர்த்தி காண்பித்து, கலவரத்துக்கு தயாரானவர்களை, தனது புத்திசாலிதனத்தால் கலைந்து போகச்செய்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள விளங்குளத்தூரில் கடந்த 2ம் தேதி நடந்த கபடி போட்டியின் போது விளங்குளத்தூர் - கீழகன்னிசேரி கிராம இளைஞர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு ஒருவருக்கொருவர் தாக்கி கொண்டனர்.
இதன் எதிரொலியாக இரு கிராமத்தை சேர்ந்த வேறு நபர்கள் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த இரு தாக்குதல் சம்பவத்துக்கும் பதில்அடி கொடுக்கும் வகையில் இரண்டு கிராமத்தினரும் கையில் அரிவாள் கம்பு, கட்டைகளுடன் மோதி கொள்ள திரண்டனர்.
ஒரு கிராமத்தை சேர்ந்த பெரியவரை மற்றொரு கிராம இளைஞர்கள் அடித்ததை கண்ட போலீசார், அவர்களை விரட்டி முதியவரை மீட்டனர்.
சம்பவ இடத்தில் பாதுகாப்பு பணியில் குறைந்த அளவே போலீசார் இருந்தாலும் கலவரத்தை தடுக்க புத்திசாலித்தனமான நடவடிக்கையை முதுகுளத்தூர் காவல் உதவி ஆய்வாளர் செல்வம் மேற்கொண்டார். அவர் தனது கைத்துப்பாக்கியை கையில் எடுத்து உயர்த்திப்பிடித்தப்படி, கலவரத்துக்கு தயாரானவர்களை கடுமையாக எச்சரித்தார்.
எஸ்.ஐ செல்வத்தின் கையில் துப்பாக்கியை பார்த்ததும் ஆவேசமாக காணப்பட்டவர்கள், சற்று தயக்கத்துடன் பின் வாங்க ஆரம்பித்தனர்.
எதிர் கிராமத்தை சேர்ந்தவர்களும் துப்பாக்கியை கண்டதும் பின் வாங்கிச்சென்றனர். வானத்தை நோக்கிச்சுடவில்லை... ஆவேசமாக காணப்பட்ட மக்கள் மீது தடியடி நடத்த வில்லை. அவர்களுக்கு தனது மிரட்டலான போலீஸ் தோரணையின் மூலம் துப்பாக்கியை தூக்கி காண்பித்து, கூடியிருந்தவர்களின் மனதில் ஒரு வித அச்ச உணர்வை ஏற்படுத்தி நடக்க இருந்த கலவரத்தை சாமர்த்தியமாக தடுத்து விரட்டி விட்டார். இதனால் அங்கு நடக்கவிருந்த பெரிய அளவிலான அசம்பாவிதம் தடுக்கப்பட்டது
இந்த நிலையில் முதுகுளத்தூர் போலீசார் இரண்டு கிராமங்களை சேர்ந்த 500 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர் . ((spl gfx out))மீண்டும் அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் தடுக்கும் பொருட்டு அந்த கிராமங்களில் தற்போது 100க்கும் மேற்பட்ட போலீசார் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்
Comments