ரூ.30 கோடிப்பே.. ரிலீசுக்கு முன்பே அள்ளினார் அண்ணாச்சி..! 28ந் தேதி தி லெஜண்ட் வெளியீடு

0 3891

தி லெஜண்ட் படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை முன்பணமாக 30 கோடி ரூபாய் கொடுத்து வினியோகஸ்தர் அன்பு செழியன் பெற்றுள்ளார். முன்னனி நாயகர்களின் படங்களுக்கு இணையாக 800 திரையரங்குகளில் வருகிற 28 - ஆம் தேதி தி லெஜண்ட் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணன் நடிப்பில், ஜெடி ஜெர்ரி இயக்கத்தில் தயாராகி உள்ள தி லெஜண்ட் படத்தை வெளியிடுவதற்கான ஏற்பாடுகள் தீவிரம் அடைந்துள்ளது.

ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் ஏற்கனவே வெளியான 2 பாடல்களும் , டிரைலரும் சமூக வலைதளங்களில் பெரிய அளவில் ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளதால் . தி லெஜண்ட் படத்திற்கு திரையரங்கு உரிமையாளர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எகிறி உள்ளது.

வருகின்ற 28 ந்தேதி உலகெங்கிலும் தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய 5 மொழிகளில் தி லெஜண்ட் வெளியாக உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மட்டும் முன்னணி நாயகர்களின் படங்களுக்கு இணையாக 800 திரையரங்குகளில் தி லெஜண்ட் படம் திரையிடப்பட உள்ளது. தமிழக வெளியீட்டு உரிமைக்காக கோபுரம் பிலிம்ஸ் உரிமையாளர் அன்புச்செழியன் 30 கோடி ரூபாயை முன்பணமாக கொடுத்துள்ளார். அதற்கான ஒப்பந்தத்தில் அன்புசெழியனும், சரவணனும் கையெழுத்திட்டுள்ளனர்.

தமிழ் சினிமாவை பொறுத்தவரை தற்போதைய நிலையில் ரஜினி, கமல், அஜீத், விஜய் , சிவகார்த்திகேயன் ஆகியோரது படங்களுக்கு அடுத்த படியாக தமிழக திரையரங்க உரிமை அதிக விலைக்கு விற்கப்பட்ட படம் சரவணனின் தி லெஜண்ட் என்பது குறிப்பிடதக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments