ஜம்மு-காஷ்மீரில் பெற்றோர் விடுத்த வேண்டுகோளை ஏற்று ஆயுதங்களை கைவிட்டு சரணடைந்த 2 தீவிரவாதிகள்!

0 1661

ஜம்மு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் உள்ள ஹதிகாம் என்ற இடத்தில் இன்று அதிகாலை, பெற்றோர் விடுத்த கோரிக்கையை ஏற்று, இரண்டு தீவிரவாதிகள் ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு சரணடைந்தனர்.

அங்குள்ள ஒரு வீட்டில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்தனர். அங்கு பதுங்கியிருந்த இரண்டு நபர்கள் புதிதாக தீவிரவாத அமைப்பில் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்ததால், அவர்களது பெற்றோர் வரவழைக்கப்பட்டனர்.

அவர்களின் பெற்றோர் ஒலிப்பெருக்கியில் விடுத்த வேண்டுகோளை ஏற்று அந்த இருவரும் சரணடைந்தனர். அந்த வீட்டில் இருந்து ஏராளமான ஆயுதங்களும், வெடிப்பொருட்களும் கைப்பற்றப்பட்டன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments