தொழில் நுட்ப கோளாறால் அடுத்தடுத்து தரையிறங்கிய ஸ்பைஸ் ஜெட் விமானங்கள் ; விளக்கம் அளிக்க சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் நோட்டீஸ்

0 1141
தொழில் நுட்ப கோளாறால் அடுத்தடுத்து தரையிறங்கும் ஸ்பைஸ் ஜெட் விமானங்கள்

ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்திற்கு சொந்தமான விமானங்களில் நேற்று மட்டும் 3 விமானங்களில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு மத்திய சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

நேற்று காலை எரிபொருள் அளவை காட்டும் கருவி வேலை செய்யாததால் அந்நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று கராச்சியில் தரையிறக்கப்பட்டது.

பிற்பகலில் மற்றொரு விமானம் நடுவானில், துணை விமானி இருக்கையை ஒட்டியுள்ள ஜன்னல் கண்ணாடியில் விரிசில் ஏற்பட்டதால் மும்பையில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

இதேபோல் நேற்று மாலை சீனாவிற்கு புறப்பட்டு சென்ற சரக்கு விமானம் ஒன்று, திடீரென வானிலை ரேடார் வேலை செய்யாமல் போனதால் மீண்டும் கொல்கத்தாவிற்கு திரும்பியது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments