இன்ஸ்டாகிராமில் நாடக காதல் வழிப்பறி.! கூட்டாளிகளுடன் காதலன் கைது.!

0 2781
இன்ஸ்டாகிராமில் நாடக காதல் வழிப்பறி.! கூட்டாளிகளுடன் காதலன் கைது.!

மதுரையில் இன்ஸ்டாகிராமில் பழகி சிறுமியை ஏமாற்றி 4லட்ச ரூபாய் மதிப்பிலான நகையை பறித்த காதலன் உள்ளிட்ட 4 பேர் கும்பலை போலீசார் கைது செய்தனர்.

மதுரை லெட்சுமிபுரம் பகுதியை சேர்ந்த சிறுமி ஒருவரிடம் மதுரை கோ.புதூர் பகுதியை சேர்ந்த பயாஸ்கான் என்ற இளைஞர் இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமாகி நட்பாக பழகி வந்துள்ளார்.

இதனை தொடர்ந்து சிறுமியை காதலிப்பதாக கூறி அவ்வப்போது நேரில் சந்தித்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட பயாஸ்கான், ஆசை வார்த்தைகளை கூறி சிறுமியிடம் இருந்து அவ்வப்போது ஏராளமாக பணத்தை ஏமாற்றி பெற்றுள்ளார்.

அதோடு ஆடைகள் மற்றும் படிப்பு செலவிற்கு பணம் தேவை என சிறுமியிடம் நைசாக பேசிய இளைஞர் பயாஸ்கான் சிறுமியின் வீட்டில் இருந்து 10 பவுன் தங்க செயினை எடுத்துவர ஐடியா கொடுத்துள்ளார்.

இதனையடுத்து வீட்டிற்கு தெரியாமல் 10பவுன் செயினை சிறுமி எடுத்து வந்த நிலையில் பயாஸ்கானின் நண்பர்களான புதூரைச் சேர்ந்த சதீஷ் மற்றும் சரவணக்குமார் ஆகியோர்கள் உதவியோடு சரவணக்குமாரின் தாயார் முத்துலெட்சுமியும் சேர்ந்து மதுரை கோ.புதூர் பகுதியில் உள்ள தனியார் நிதிநிறுவனத்தில் நகையை 2லட்சத்தி 70ஆயிரம் ரூபாய்க்கு அடகு வைத்துள்ளனர்.

அந்த பணத்தில் பயாஸ்கான் 1 லட்சத்தி 70ஆயிரம் ரூபாயும் , அவனது நண்பர்கள் சதீஷ் 20ஆயிரமும், சரவணக்குமார் 30ஆயிரம் ரூபாயையும், சரவணக்குமாரின் தாயார் முத்துலெட்சுமி 50ஆயிரம் ரூபாயையும் பங்குபோட்டுக் கொண்டதாக கூறப்படுகின்றது.

இதற்கிடையே சிறுமியின் வீட்டில், தங்க செயின் காணாமல் போனதை கண்ட பெற்றோர்கள் சிறுமியிடம் துருவி துருவி விசாரித்த போது சிறுமி நடந்தவற்றை பெற்றோர்களிடம் கூறியதாக சொல்லப்படுகின்றது.

இதையடுத்து, தனது மகளை காதலிப்பதாக கூறி ஏமாற்றி பாலியல் தொந்தரவு அளித்ததோடு 4லட்சம் ரூபாய் நகையை அடகுவைத்து மோசடியில் ஈடுபட்ட நாடக காதல் கும்பல் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சிறுமியின் தாயார் தல்லாகுளம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்த புகாரின் பேரில் காவல் ஆய்வாளர் பாலமுருகன், விசாரணை நடத்தி சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்து ஏமாற்றியதாக கோ.புதூரைச் சேர்ந்த பயாஸ்கான் மீது போஸ்கோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டார்.

அவரது நண்பர்கள் சதீஷ், சரவணக்குமார் மற்றும் சரவணக்குமாரின் தாயார் முத்துலெட்சுமி ஆகிய 4பேர் மீது மோசடி வழக்கின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும், அவர்களிடம் இருந்து 4 லட்சம் மதிப்பிலான 10 பவுன் தங்க நகையையும் பறிமுதல் செய்தனர்.

சிறுமியை ஏமாற்றி மோசடியில் ஈடுபட்ட நபர்களை கைது செய்த நகையை மீட்ட தனிப்படையினருக்கு காவல்துறை ஆணையர் செந்தில்குமார் பாராட்டு தெரிவித்தார்.

இன்ஸ்டாகிராமில் காதல்வலை விரித்து நகைபறிக்கும் நாடக காதல் கும்பலிடம் பள்ளிச்சிறுமிகள் உஷாராக இருக்காவிடில் வாழ்க்கை சீரழிந்து விடும் என்று போலீசார் எச்சரிக்கின்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments