கொசுக்களை கொண்டே நோய்பரவலை கட்டுப்படுத்தும் புதிய முறை அறிமுகம்
டெங்கு மற்றும் சிக்கன்குனியாவை கட்டுப்படுத்தும் பாக்டீரியாக்களை கொண்ட கொசுக்கள் மூலம், நோய்பரவலை கட்டுப்படுத்தும் ஒரு நவீன முறையை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலும், வெக்டர் கட்டுப்பாட்டு ஆராய்ச்சி மையமும் இணைந்து உருவாக்கியுள்ளன.
புதுசேரியில் கடந்த 4 ஆண்டுகால ஆராய்ச்சிக்கு பிறகு இந்த டெங்கு எதிர்ப்பு கொசுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. ஆய்வகத்தில் உருவாக்கப்படும் பெண் கொசுக்கள் ஊள்ளுர் நீர்நிலைகளில் விடப்படும்.
அதனுடன் ஆண் கொசு இணையும் போது, டெங்கு மற்றும் சிக்கன்குனியாவை பரப்பாத கொசுக்கள் உருவாகும் என, ஐசிஎம்ஆர் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Comments