ஈபிள் கோபுரத்தை 60 மில்லியன் யூரோ செலவில் சீரமைக்கும் பணி விரைவில் ஆரம்பம்..!
பிரான்சு நாட்டு தலைநகர் பாரீசில் உள்ள ஈபிள் கோபுரம் 60மில்லியன் யூரோ செலவில் சீரமைக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
உலக அதிசயங்களில் ஒன்றாக விளங்கும் இந்த கோபுரம் ஆயிரத்து 63 அடி உயரம் கொண்டதாகும். 19ஆம் நூற்றாண்டில் Gustave Eiffel என்பவரால் முழுவதும் இரும்பினை பயன்படுத்தி இந்த கோபுரம் கட்டப்பட்டதாகும்.
இதனை பார்க்க ஒவ்வொரு வருடமும் 6 மில்லியன் சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். இந்த நிலையில் ஈபிள் கோபுரம் துருப்பிடித்து மோசமான நிலையில் இருப்பதாகவும், முழுமையான பழுதுபார்ப்பு தேவை என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
Comments