மும்பையில் பலத்த மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு.. மின்சார ரயில்கள், பேருந்துகள், டாக்சிகளுக்காக மக்கள் அவதி..!
மும்பை நகரில் பெய்த பலத்த மழையால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
மின்சார ரயில்கள் நிறுத்தப்பட்டதால் மக்கள் பேருந்துகளுக்காகத் தவித்தனர். சாலைகளில் கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. மாலையில் பலர் வீடு திரும்ப மிகவும் சிரமப்பட்டனர்.
இதனிடையே புறநகர் பகுதிகளிலும் மழை வெளுத்து வாங்கியது. பவாய் ஏரியில் வெள்ளப் பெருக்கு காரணமாக உடைப்பு ஏற்பட்டது
இதே போன்று தானே பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. மும்பை பைபாஸ் சாலையில் பலமான மழை காரணமாக அப்பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Comments