அக்னிபாதை - விமானப்படையில் இணைய இதுவரை 7.5 லட்சம் பேர் விண்ணப்பம்
கடுமையான எதிர்ப்பு போராட்டங்களுக்கு இடையிலும், சுமார் ஏழரை லட்சம் இளைஞர்கள் அக்னி பாதை திட்டத்தின் கீழ் விமானப்படையில் பணியாற்ற விண்ணப்பித்துள்ளனர்.
17 வயது முதல் 23 வயது வரையிலான இளைஞர்கள் நான்கு ஆண்டுகள் ஒப்பந்த முறையில் ராணுவத்தின் முப்படைகளிலும் பணியாற்ற அக்னிபாதை என்ற திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. இதில் 25 சதவீதம் பேர் மட்டுமே நிரந்தரமாக்கப்படுவார்கள் என்பதால் எதிர்காலம் குறித்த பிரச்சினை எழுந்து போராட்டங்கள் எழுந்தன.
இதையடுத்து 4 ஆண்டு ராணுவ சேவைக்குப் பிறகு அக்னி வீரர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிப்பதாக மத்திய அரசின் அமைச்சகங்களும், துணை ராணுவப் படைகளும் வாக்குறுதி அளித்தன.
இத்திட்டத்தின் கீழ் முப்படைகளில் இணைய விண்ணப்பங்கள் பெறப்பட்டு வந்த நிலையில், நேற்றுடன் காலக் கெடு முடிவடைந்தது.அக்னிபாதை திட்டத்தின் கீழ் விமானப் படையில் சேர்வதற்கு 12 நாட்களில் சுமார் 7 லட்சத்து 50 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கான நேர்முகத் தேர்வு ஜூலை 24-ந்தேதி முதல் நடைபெற உள்ளது.
Comments