ஐ.என்.எஸ். விக்ராந்தின் இறுதி சோதனை ஓட்டம் இந்த வாரத்தில் கொச்சி கடற்பகுதியில் நடைபெற உள்ளதாக தகவல்
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட முதல் விமானந்தாங்கி கப்பலான ஐ.என்.எஸ். விக்ராந்தின் இறுதி சோதனை ஓட்டம், இந்த வாரத்தில் கொச்சி கடற்பகுதியில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சுமார் 23 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் அந்த கப்பல் கட்டமைக்கப்பட்டுள்ளது.அதிகபட்சமாக 28 நாட்ஸ் வேகத்தில் பயணிக்கக்கூடிய இந்த கப்பல், 7 ஆயிரத்து 500 நாட்டிக்கல் மைல் தூரம் தொடர்ந்து பயணிக்கும் திறன்கொண்டது.
கடலில் வெள்ளோட்டம் வெற்றிகரமாக முடிந்ததும், இந்திய சுதந்திரத்தின் 75 ஆண்டுகளை நினைவுகூரும் வகையில் அடுத்த மாதம் கடற்படையில் இணைக்கப்படும் என கடற்படை அதிகாரி தெரிவித்துள்ளார்.
Comments