விரைவில் மகாராஷ்டிரா அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படும் -தேவேந்திர பட்னாவிஸ்
மகாராஷ்டிரா அமைச்சரவை விரைவில் விரிவாக்கம் செய்யப்படும் என துணை முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.
துணை முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு தனது சொந்த ஊரான நாக்பூருக்கு சென்ற அவருக்கு விமான நிலையத்தில் இருந்து வீடு வரை பாஜக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். முன்னதாக விமான நிலையத்தில் பேசிய அவர், அமைச்சரவை விரைவில் விரிவாக்கம் செய்யப்படும் என தெரிவித்தார்.
அமைச்சரவை மற்றும் இலாகாக்கள் குறித்து துணை முதலமைச்சருடன் கலந்து பேசிய பின்னர் பாஜக தேசிய தலைவர்களிடம் விவாதித்து முடிவு எடுக்கப்படும் என முதலமைச்சர் ஷிண்டே ஏற்கனவே கூறியிருந்தார்.
Comments