அமெரிக்காவில் சுதந்திர தின அணிவகுப்பில் திடீர் துப்பாக்கிச் சூடு.. அலறிய மக்கள்.. 6 பேர் சுட்டுக் கொலை!
அமெரிக்காவின் இல்லினாய்ஸ் மாகாணத்தில் ஜூலை 4 சுதந்திர தின அணிவகுப்பில் துப்பாக்கிச் சூடு நடத்தி 6 பேர் உயிரிழப்புக்கு காரணமான நபரை போலீசார் கைது செய்தனர்.
சிகாகோ நகரின் ஹைலேண்ட் பூங்காவில் சுதந்திர தின அணிவகுப்பில் ஈடுபட்டவர்களை நோக்கி மர்ம நபர் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பினான். 6 பேர் கொல்லப்பட்ட நிலையில், 40-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் தொடர்புடையதாக ராபர்ட் கிரிமோ என்பவனை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சிகாகோ துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு அதிபர் ஜோ பைடன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
Comments