ஏடிஎம் குப்பைத் தொட்டியில் நகைகளை வீசி விட்டு சென்ற பெண்.. பத்திரமாக மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த போலீசார்.!
சென்னையை அடுத்த குன்றத்தூரில் தனியார் வங்கி ஏடிஎம் குப்பை தொட்டியில் 43 சவரன் நகைகளை போட்டு விட்டு சென்ற பெண் சிசிடிவி மூலம் கண்டுபிடிக்கப்பட்டு நகைகளும் பத்திரமாக ஒப்படைக்கப்பட்டது.
குன்றத்தூர் முருகன் கோவில் செல்லும் சாலையில் உள்ள தனியார் வங்கியின் ஏடிஎம் மையத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. அந்த பெண் குன்றத்தூரைச் சேர்ந்தவர் என்பதும் மன அழுத்தத்தில் இருந்து வந்ததும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.
Comments