கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தான்... 400 ஜவுளி ஆலைகள் மூடப்படும் அபாயம்!

0 3126

கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தானில் எரிபொருள் விலை உயர்வு மற்றும் மின்பற்றாக்குறை காரணமாக சுமார் 400 ஜவுளி ஆலைகள் மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.

தள்ளாடும் பொருளாதாரத்துடன் அதிகரித்து வரும் உலகளாவிய எரிபொருள் விலையும் பாகிஸ்தானை புதிய நெருக்கடிக்கு ஆளாக்கியுள்ளது. பெட்ரோல் மற்றும் எரிபொருள் விநியோகம் இல்லாததால், பாகிஸ்தானில் மின் உற்பத்தி நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.

இந்நிலையில், எரிபொருள் விலை உயர்வால் பஞ்சாப் மாகாணத்தில் செயல்பட்டு வரும் 400 ஜவுளி ஆலைகள் முடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. இதனால், ஆயிரக்கணக்கான ஊழியர்கள் வேலையிழக்கும் சூழல் உருவாகியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments