"ஜூலை 11 அதிமுக பொதுக்குழுக் கூட்ட விவகாரத்தில் தலையிட முடியாது" - உயர்நீதிமன்றம்
ஜூலை 11ஆம் தேதியன்று நடைபெற உள்ள அதிமுக பொதுக்குழு கூட்ட விவகாரத்தில் தலையிட முடியாது என்றும் இது குறித்து தனி நீதிபதியை தான் நாட வேண்டும் என்றும் உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு தெரிவித்துள்ளது.
நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 23 வரைவு தீர்மானங்களை பொதுக்குழுக் கூட்டத்தில் நிராகரித்ததும், தமிழ்மகன் உசேனை நிரந்தர அவைத்தலைவராக நியமித்ததும், பொதுக்குழுவை ஜூலை 11ம் தேதி கூட்ட தீர்மானங்கள் நிறைவேற்றியதும் நீதிமன்ற உத்தரவை மீறிய செயல் என பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் வழக்கு தொடர்ந்தார்.
இதன் விசாரணையில், ஜூலை 11ல் நடக்கும் பொதுக்குழுவுக்கு தடை விதிக்க வேண்டும் என இந்த மனுவில் எழுப்ப முடியாது என நீதிபதிகள் தெரிவித்தனர்.
இறுதி செய்யப்பட்ட 23 தீர்மானங்களை பொதுகுழுவில் முன்வைத்து, அவற்றில் எந்த முடிவையும் எடுக்கலாம் என்றும், மற்ற விவகாரங்களை ஆலோசிக்கலாமே தவிர முடிவெடுக்கக் கூடாது என்ற உத்தரவு ஜூன் 23 பொதுக்குழு கூட்டத்திற்கு மட்டும் பொருந்தும் என்றும் அதன் பின் நடக்கும் கூட்டங்களுக்கு பொருந்தாது என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
Comments