பலாப்பழத்தை தும்பிக்கையால் பறிக்க தோட்டப்பகுதிகளில் முகாமிட்டுள்ள காட்டுயானைகள்.. மக்கள் கவனமுடன் இருக்குமாறு எச்சரிக்கை..!

0 1948
பலாப்பழத்தை தும்பிக்கையால் பறிக்க தோட்டப்பகுதிகளில் முகாமிட்டுள்ள காட்டுயானைகள்.. மக்கள் கவனமுடன் இருக்குமாறு எச்சரிக்கை..!

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உயரமான பலாமரத்தில் காய்த்துள்ள பலாப்பழத்தை காட்டுயானை ஒன்று ஒரு காலைத் தூக்கியபடியே தும்பிக்கையால் பறிக்க முயலும் காணொளி சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் வழியில் உள்ள தோட்டங்களில் பலாப்பழங்கள் காய்த்து குலுங்குவதால் அவற்றை சாப்பிட வனப்பகுதிகளில் இருந்து ஏராளமான யானைகள் வந்து முகாமிட்டுள்ளன.

பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் இரவில் கவனமுடன் இருக்குமாறு வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments