காரைக்காலில் காலராவை கட்டுப்படுத்த பொது சுகாதார அவசர நிலை பிரகடனம்.!
காரைக்காலில் காலரா பரவலை கட்டுப்படுத்த பொது சுகாதார அவசர நிலையை, குடும்ப நலன் மற்றும் பொது சுகாதாரத்துறை அறிவித்து உள்ளது.
கடந்த சில நாட்களாக கழிவு நீர் கலந்த குடிநீர் மற்றும் சுகாதாரமற்ற உணவுகளால் வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டு 1,700க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. தூய்மை பணிகள் மேற்கொள்ள பள்ளிக், கல்லூரிகளுக்கு 3 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், காலரா பரவல் தடுப்பு குறித்து சுகாதரத்துறை அதிகாரிகளுடன் துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார்.
Comments