மும்பை ஆரே காலனி பகுதியில் மெட்ரோ பணிமனை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் போராட்டம்!
மும்பை ஆரே காலனி பகுதியில் மெட்ரோ பணிமனை அமைக்க முடிவு செய்த முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவை கண்டித்து சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மெட்ரோ பணிகளுக்காக ஆரே காலனியில் ஆயிரத்து 287 ஹெக்டேர் வனப்பகுதியில் உள்ள 2 ஆயிரத்து 700 மரங்களை வெட்டுவதற்கு உத்தவ் தாக்கரே தலைமையிலான முந்தைய சிவசேனா அரசு தடை விதித்த நிலையில், தற்போது மகாராஷ்டிராவில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்துக்கு பிறகு மெட்ரோ பணிமனை அமைக்க ஏக்நாத் ஷிண்டே திட்டமிட்டுள்ளார்.
Comments