விளையாடிக் கொண்டிருந்த 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.. எரித்துக் கொல்ல முயன்ற 16 வயது சிறுவன் கைது..!

0 2644
விளையாடிக் கொண்டிருந்த 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.. எரித்துக் கொல்ல முயன்ற 16 வயது சிறுவன் கைது..!

தேனி சின்னமனூர் அருகே, 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து எரித்துக் கொலை செய்ய முயன்ற 16 சிறுவனை போலீசார் கைது செய்தனர்.

சிறுமி தனது வீட்டுக்கு அருகில் இருக்கும் பள்ளி வளாகத்தில் விளையாடிக் கொண்டிருந்த போது, அங்கு வந்த சிறுவன் போதையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

சிறுமி கத்திச் கூச்சலிட்டதால் தான் மாட்டிக் கொள்வோம் என எண்ணி கீழே கிடந்த பேப்பரில் தீ வைத்த சிறுவன், அதனை சிறுமியின் மீது போட்டுவிட்டு தப்பியோடியதாக சொல்லப்படுகிறது.

சிறுமியின் உடையில் தீப்பற்றி அலறித் துடித்த நிலையில், அக்கம்பக்கத்தினர் சிறுமியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதனையடுத்து அப்பகுதியிலேயே பதுங்கி இருந்த சிறுவனை போலீசார் கைது செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments