டொயோட்டாவின் அர்பன் குரூயிசர் ஹைரைடர் எஸ்யுவி மாடல் இ-கார் அறிமுகம்
இந்திய சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட அர்பன் குரூயிசர் ஹைரைடர் எஸ்.யு.வி. மாடல் எலக்ட்ரிக் காரை டொயோட்டா நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
ஏற்கனவே சர்வதேச அளவில் மாருதி நிறுவனத்துடன் இணைந்து கார்களை விற்பனை செய்து வரும் டொயோட்டா நிறுவனத்தின் முதல் செல்ப் சார்ஜிங் வசதி கொண்ட காராக இது பார்க்கப்படுகிறது.
தற்போது, புதிய மாடல் எலக்ட்ரிக் காரை கர்நாடக மாநிலத்தில் அமைந்துள்ள தொழிற்சாலையில் தயாரிக்க உள்ளது.
அர்பன் க்ரூஸர் ஹைரைடர் எஸ்யூவி பெட்ரோலில் இயங்கும் காரை விட 40 முதல் 50 சதவீதம் அதிக எரிபொருள் திறன் கொண்டதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Comments