நுபுர் சர்மா பற்றிய உச்சநீதிமன்றத்தின் கருத்து - சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜூ பதில்

0 2846

உச்சநீதிமன்றம் நுபுர் சர்மாவைப் பற்றி கூறிய கருத்துகளை உரிய முறையில் அணுகுவோம் என்று மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார்.

உச்சநீதிமன்றம் தெரிவித்தது கருத்துதான் என்றும் அது உத்தரவு அல்ல என்றும் அவர் விளக்கினார். ஹைதராபாத் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சட்ட அமைச்சர் உச்சநீதிமன்றத்தின் கருத்துகள் ஆட்சேபகரமாக இருந்தாலும் சட்ட அமைச்சர் என்ற முறையில் அதைப்பற்றி பேச முடியாது என்று தெரிவித்தார். உரிய தளத்தில் இதைப்பற்றி விவாதிப்போம் என்றும் அமைச்சர் கூறினார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments