திடீரென பின்நோக்கி நகர்ந்து ஆற்றில் மூழ்கிய ஆம்புலன்ஸ்..!

0 2695

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் தோடா மாவட்டத்தில் மருத்துவமனை வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஆம்புலன்ஸ் திடீரென சாலை விட்டு விலகி ஓடி ஆற்றில் மூழ்கியது.

பராமரிப்பு பணிக்காக நிறுத்தப்பட்டிருந்த ஆம்புலன்ஸ், திடீரென பின்நோக்கி நகர்ந்து கன்பத் பாலம் அருகே உள்ள செனாப் ஆற்றில் விழுந்து மூழ்கியது.

இந்த சம்பவத்தில் உயிர்சேதம் தவிர்க்கப்பட்ட நிலையில், ஆம்புலன்ஸ் கடும் சேதமடைந்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மற்றும் மீட்புப் படையினர் இணைந்து ஆற்றில் மூழ்கிய ஆம்புலன்ஸை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments