லாட்டரி மார்ட்டினின் ரூ.173 கோடி மதிப்புள்ள அசையும், அசையா சொத்துகள் முடக்கம் - அமலாக்கத்துறை
சட்டவிரோத பண பரிவர்த்தனை புகாரில் லாட்டரி அதிபர் மார்ட்டின் மற்றும் சரவணா ஸ்டோர்ஸ் கோல்ட் பேலஸ் மற்றும் அதன் நிர்வாகிகளின் சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.
2009 - 2010ஆம் ஆண்டுகளில் சிக்கிம் மாநில லாட்டரி விதிகளை மீறி வருவாய் ஈட்டி, அதை 40-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மூலம் மாற்றி மார்ட்டின் முதலீடு செய்ததாக வருமான வரித்துறை குற்றஞ்சாட்டியது. அதன்படி, வழக்குப்பதிவு செய்த அமலாக்கத்துறை அவரது 173 கோடியே 48 லட்ச ரூபாய் மதிப்புடைய சொத்துகளை தற்போது முடக்கியுள்ளது.
மேலும், இந்தியன் வங்கியில் கடன் பெற்று மோசடி செய்த புகாரில் சரவணா ஸ்டோர்ஸ் கோல்ட் பேலஸ் மற்றும் அதன் நிர்வாகிகளின் சுமார் 234 கோடி ரூபாய் மதிப்பு சொத்துக்களும் அமலாக்கத்துறையால் முடக்கப்பட்டது.
Comments